தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் ரூ.38 லட்சம் கோடி ஊழல்: ராகுல்காந்தி
- 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
- தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.
இந்நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், பேசிய அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்.
தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.
பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.
ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது
வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது
பங்குச் சந்தை முறைகேட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும், இதனால் பயனடைந்தவர்கள் யார் என தெரிய வேண்டும்" என்று புள்ளி விவரங்களுடன் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.