இந்தியா (National)

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு

Published On 2024-08-11 05:20 GMT   |   Update On 2024-08-11 05:20 GMT
  • ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
  • ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:

நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (12-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

கோவில் நடையை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறக்கிறார். நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக அச்சன்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகிறது.

பூஜைக்கு பிறகு பக்தர் களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேி மாலை திறக்கப்பட உள்ளது.

மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News