இந்தியா

உ.பியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து.. உயிர்தப்பிய பயணிகள்

Published On 2024-08-17 01:22 GMT   |   Update On 2024-08-17 05:04 GMT
  • வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டது.
  • தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று[ஆகஸ்ட் 17] [சனிக்கிழமை] அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் உ.பியின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த தடையில் இடித்துள்ளது.

 

இதில் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததை அறிந்து தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிறப்பு ரெயிலில் அதிகாரிகள் அகமதாபாத் அனுப்பிவைத்தனர். 

 

Tags:    

Similar News