இந்தியா

வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு! ப.சிதம்பரம் டுவீட்

Published On 2023-08-30 07:17 GMT   |   Update On 2023-08-30 07:17 GMT
  • தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?
  • சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வரும் என மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி இது பெண்களுக்கு மோடி அரசு அளிக்கும் பரிசு. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாலும், இன்னும் மூன்று மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், ஆறு மாதங்களில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டு விலையை குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களை எம்.பி.யும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?

சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

ரூ. 1100-க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!

வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News