இந்தியா

சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் அஞ்சலி செலுத்திய எஸ்.ஜி. சூர்யா

Published On 2024-05-28 15:53 GMT   |   Update On 2024-05-28 15:53 GMT
  • கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகம் எழுதிய எஸ்.ஜி. சூர்யா.
  • புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி.

சாவர்க்கரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், "தாய்நாட்டின் சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் ஜிக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தான் எழுதி வந்த "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்படிருந்த அறைக்கு நேரில் சென்ற எஸ்.ஜி. சூர்யா அவர் எழுதிய "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் சாவர்க்கர் சிறையில் பயன்படுத்திய உரை, தட்டு உள்ளிட்ட பொருட்களைப் பார்வையிட்ட அவர், சிறை வளாகத்தில் இருந்த சாவர்க்கர் சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News