இந்தியா

பாபா சித்திக் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஷாருக்கான் - ஏன் தெரியுமா?

Published On 2024-10-15 14:49 GMT   |   Update On 2024-10-15 14:49 GMT
  • சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
  • ஷாருக்- சல்மான் இடையே ஏற்பட்ட சண்டையை சித்திக் தீர்த்து வைத்தார்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.

66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தவர். தனது இளமைக் காலம் முதல் 48 ஆண்டுகாலமாக காங்கிரசில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவிகளிலும் இருந்துள்ளார்.

இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜீஸ்ஹான் எம்.எல்.ஏ வாக இருக்கும் பாந்த்ரா தொகுதியில் சித்திக் பலகாலமாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் ஆவார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார்.

பாபா சித்திக்கின் இறுதிச் சடங்கில் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா செட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால் சித்திக்கின் நெருங்கிய நண்பரான ஷாருக்கான் இறுதிச் சடங்கில் கொள்ளாதது சர்ச்சையானது. இந்நிலையில், அரசியல் காரணங்கள் காரணமாக தான் ஷாருக்கான் சித்திக்கின் இறுதிச் சடங்கில் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாபா சித்திக்கின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. கடந்த காலங்களில் இந்த கும்பல் சல்மான் கான், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மீண்டும் இந்த சர்ச்சையால் சிக்க ஷாருக்கான் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News