இந்தியா

சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

Published On 2024-06-08 07:42 GMT   |   Update On 2024-06-08 09:53 GMT
  • உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்பூர்- தண்டேவாடா- கொண்டாகவுன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று ஜூன் 7 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிழக்கு பஸ்தர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நெடுங்காலமாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவி வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அடர் கானகத்துக்குள் இவர்கள் இருப்பு கொண்டுள்ளதால் அவர்களை தேடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட்  ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

Tags:    

Similar News