இந்தியா

ஒன்றாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்.. தந்தை கூறும் அதிர்ச்சிக் காரணம்

Published On 2024-08-20 03:15 GMT   |   Update On 2024-08-20 03:15 GMT
  • அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர்.
  • தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவரும் கைகளைக் கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் அசோக் குமார். இவருக்கு அனிதா, சுனிதா [19], புனிதா [17] என மூன்று மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் திருமணமாகிச் சென்றுவிட்டார். சுனிதா 12 வகுப்பில் தேரியுள்ள நிலையில் புனிதா 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் மீண்டும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் மகள்களைத் தந்தை அசோக் குமார் தேடியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் இருவரின் உடல்களும் பிசுஷி ஆற்றில் Bisuhi river கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிராமவாசிகள் உதவியுடன் அவர்கள் இருவரின் உடல்களும் ஆற்றில் இருந்து பின்னர் மீட்கப்பட்டது. அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர். தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார். அனிதாவின் கணவன் அவர்கள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Tags:    

Similar News