இந்தியா

தூங்குறதுதான் வேலையே!.. ஸ்லீப் இன்டர்ன்ஷிப் மூலம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு பெண்..

Published On 2024-09-26 00:53 GMT   |   Update On 2024-09-26 00:54 GMT
  • ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்பது தூங்குவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வேலையாகும்.
  • இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்வுடனே எழுந்துகொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

வேலையை முடித்துவிட்டு வந்ததும் வீட்டு வேலைகள், குடும்ப பொறுப்பு என தூங்குவதற்கே நேரம் இல்லாமல் பலர் அல்லாடுகின்றனர். ஆனால் தூங்குவதே வேலையாக இருந்து அதற்கு சம்பளமும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் பலருக்கு வந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி அந்த ஏக்கத்தை மட்டுப்படுத்திவிடும். இதை பொய்யாகும் விதமாக தூங்குவதற்கான இண்டர்ன்சிபில் சேர்ந்து அதிலிருந்து ரூ.9 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பெண் சைஸ்வாரி பாட்டீல்.

ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்பது தூங்குவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வேலையாகும். ஒவ்வொரு இரவும் 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குவதுதான் இந்த வேலையின் சேர்பவர்கள் செய்ய வேண்டிய வேலை. இதில் எல்லா இன்டர்ன்களுக்கும் வசதியான படுக்கையுடன் தூக்கத்தைக் கண்காணிக்கும் ஸ்லீப் டிராக்கர்கள் வழங்கப்படும்.

அந்த டிராக்கர்கள் மூலம் இன்டர்ன்களின் தூக்கச் சுழற்சி மற்றும் தன்மை கண்காணிக்கப்படும். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு விண்ணப்பிப்போர் தூங்குவதின் மேல் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றி வீடியோ ரெசியூம் ரெடி செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் இன்டர்வியூ நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலையை உருவாகியுள்ளது Wakefit என்ற இந்தியாவைச் சேர்ந்த மெத்தை [mattress] தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

 

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்வுடனே எழுந்துகொள்கின்றனர் என்று கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கொர்போர்டு 2024 என்ற ஆய்வின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்றும் இதனால் தூக்கத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் கருதி ஸ்டைபண்ட் உடன் இந்த இன்டர்ன்ஷிப் வேலையே உருவாக்கியதாகவும் அந்நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தலைவர் கூறுகிறார்.

இந்த வேலைக்கு பெங்களூரை சேர்ந்த சைஸ்வாரி பாட்டீல் என்ற வங்கி ஊழியர் விளையாட்டாக அப்பளை செய்த நிலையில் தேர்தெடுக்கப்பட்ட 12 பேரில் அவரின் பெயரும் வந்தது குறித்து ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அந்த இன்டர்ன்ஷிப் மூலம் ஸ்டைபண்ட் ஊதியமாக ரூ.9 லட்சத்தை அவர் ஈட்டியுள்ளார்.

Tags:    

Similar News