இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்

Published On 2024-10-22 02:37 GMT   |   Update On 2024-10-22 02:37 GMT
  • உடைமைகளை அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது.
  • பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரமாகி உள்ளது.

இந்த நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாக பயணித்த ஒரு பெண் பயணி, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டார். அவரது உடைமைகளை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோப்பநாயை வரவழைத்து அதனை மோப்பம் பிடிக்கச் செய்தனர். நாய் மோப்பம் பிடித்து, அது போதைப்பொருள் என சுட்டிக்காட்டியது.

உடைமைகளை திறந்து ஆய்வு செய்ததில், 'ஹைட்ரோபோபிக்' என்கிற உயர்ரக போதைப்பொருள் இருந்தது. மொத்தம் சுமார் 15 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் ஆகும். பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News