இந்தியா
கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பாடல்
- 2024-ம் ஆண்டிற்கான 66-வது கிராமி விருதுகள் அடுத்த 85 நாட்களில் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி இயற்றிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 2024-ம் ஆண்டிற்கான 66வது கிராமி விருதுகள் அடுத்த 85 நாட்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‛அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என விருது வழங்கும் அமைப்பு சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளது.
சிறு தானியங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்திய அமெரிக்க பாடகர் பால்குனி ஷா இணைந்து இயற்றியுள்ளார்.
இந்தப் பாடலில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி சிறு தானியங்கள் குறித்து பேசும் காட்சிகளும் இடம் பிடித்துள்ளன.