"கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்": அவரது மனைவி புதிய பிரசாரத்தை தொடங்கினார்
- என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.
- தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.
புதுடெல்லி:
டெல்லி அரசில் புயலை கிளப்பி இருக்கும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (நேற்று) வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலை 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் "கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்" என்ற புதிய பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா தொடங்கி உள்ளார்.
கெஜ்ரிவால் கைதுக்குப்பிறகு 3வது முறையாக காணொலியில் உரையாற்றிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறுகையில்,
* என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.
* தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.
* 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.