இந்தியா
நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
- கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
- மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விவகாரம் என்றது.
புதுடெல்லி:
கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விவகாரம். அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்?
ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா? இது மிகவும் தீவிரமான விவகாரம்.
மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதும், கூட்டத்தொடர் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறுவதும் நெருப்புடன் விளையாடுவது போன்றது என தெரிவித்துள்ளது.
நெருப்புடன் விளையாடுகிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என கண்டனம் தெரிவித்தது.