இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

Published On 2023-02-04 14:13 GMT   |   Update On 2023-02-04 16:36 GMT
  • ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
  • புதிய நீதிபதிகள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும்.

புதுடெல்லி:

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.

Tags:    

Similar News