இந்தியா

பள்ளி பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- மாநிலங்கள் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2024-09-25 01:47 GMT   |   Update On 2024-09-25 01:47 GMT
  • மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.
  • தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

புதுடெல்லி:

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 2021-ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அந்த நெறிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இதற்கிடையே, 'பச்பன் பச்சோவா அந்தோலன்' என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் நாகரத்னா, கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு இல்லாததால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

அதையடுத்து, பள்ளி பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News