செந்தில் பாலாஜி வழக்கு- அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
- செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன என கேள்வி.
- செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? என கேள்வி.
செந்தில் பாலாஜி ஜாமின் மீதான மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல், அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா ? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுவிட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, முதல் வழக்கில்21 சாட்சிகளும் 2வது வழக்கில் 100 சாட்சிகளும், 2வது வழககில் 100 சாட்சிகளும் 3வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? எனவும் நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இறுதியில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.