இந்தியா

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: சுப்ரீம் கோர்ட் ஒத்திவைப்பு

Published On 2024-08-20 12:14 GMT   |   Update On 2024-08-20 12:20 GMT
  • செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தது.
  • செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒத்திவைத்தது.

புதுடெல்லி:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News