இந்தியா

திடீர் வானிலை மாற்றம்- டெல்லியில் கனமழையால் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

Published On 2024-04-24 03:51 GMT   |   Update On 2024-04-24 03:51 GMT
  • டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
  • அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. கடுமையான வெயிலில் தவித்த பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்களும் தாமதமாக வந்தன.

இந்த விமானங்களில், 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்தசரஸ் மற்றும் லக்னோவிற்கும், தலா ஒரு விமானம் மும்பை மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறும் போது, டெல்லியில் வானிலை திடீரென மாறியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது. பலத்த காற்றும் லேசான மழையும் பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News