இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2023-05-04 09:51 GMT   |   Update On 2023-05-04 09:51 GMT
  • ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்:

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பெயர் சகீர் மஜீத்,மற்றும் அகமது என்பது தெரியவந்தது. இருவரும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நேற்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News