காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது
- காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.
- ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார்.
காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.
கடந்த டிசம்பர் 19-ந்தேதி நடந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.