இந்தியா
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்... கர்நாடகாவுக்கு பரிந்துரைத்த காவிரி ஒழுங்காற்றுக் குழு
- தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.
- கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 91-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
4 நீர்த்தேக்கங்களில் 52.84 சதவீதமாக மொத்த வரத்து குறைந்துள்ளது. இதனால் தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.
கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு, டிசம்பர் இறுதி வரை தமிழகத்திற்கு 3128 கனஅடி வீதமும், ஜனவரி மாதம் 1030 கனஅடி வீதமும் நீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்துள்ளது.