இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லியின் பழைய கால புகைப்படங்கள் வைரல்

Published On 2023-07-16 07:53 GMT   |   Update On 2023-07-16 07:53 GMT
  • மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

டெல்லி மற்றும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் வி.ஐ.பி. பகுதிகள் உள்பட அனைத்து இடங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது யமுனா தனது இடத்தை மீட்டெடுக்கிறது என்ற தலைப்பில் யமுனை ஆற்றின் பழைய புகைப்படங்களையும், தற்போது வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளையும் பதிவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் ஒரு காலத்தில் செங்கோட்டையின் பின்புற சுவருக்கு அருகில் யமுனா நதி எவ்வாறு பாய்ந்து செல்கிறது என்பதை காண முடிகிறது.

மேலும் யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News