இந்தியா

ஈரான் முன்னாள் அதிபரின் மகளுக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2023-01-11 05:16 GMT   |   Update On 2023-01-11 05:18 GMT
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
  • அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமியின் மகள் பேசே ஹாஷிமிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே மேசே ஹாஷிமி, 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.


Tags:    

Similar News