இந்தியா

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா

Published On 2023-03-20 03:29 GMT   |   Update On 2023-03-20 04:51 GMT
  • டெல்லி விமான நிலையத்தில் ஜப்பான் பிரதமருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.
  • 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.

ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

குறிப்பாக இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருந்தப்படுகிறது.

Tags:    

Similar News