வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பண்ணையை தொடங்கிய ஐடி ஊழியர்
- அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
- கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.
மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-
நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.
தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.