கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் - பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசனை
- ஆலோசனையை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஜே.பி. நட்டா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத்), சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுகிறது.
மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அநேகமாக வருகிற 8-ந்தேதி புதிய அரசு பொறுப்பேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பில் டெல்லி உள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுடன் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
ஆலோசனையை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஜே.பி. நட்டா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத்), சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுகிறது. இதனிடையே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.