ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு, ராப்ரிதேவி, தேஜஸ்விக்கு ஜாமின்
- கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
- வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
புதுடெல்லி:
ரெயில்வே பணி வழங்குவதற்கு நிலத்தை லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் இன்று காலை டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் உத்தரவிட்டார்.