ஐதராபாத் ஐடி நிறுவனங்களில் அமைச்சர் ஆய்வு- சென்னையில் புதிய மாற்றங்கள் கொண்டுவர திட்டம்
- தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாட்டிலேயே தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கி வருகிறது.
தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத்தில் தகவல் தொழில் நுட்பதுறை புதிய வேகத்தை எட்டியுள்ளது.
தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் 3 நாள் சுற்றுப் பயணமாக ஐதராபாத் சென்றனர்.
பின்னர் தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.
அப்போது தெலுங்கானாவில் ஒரு வலுவான தகவல் நுட்பத்தை உருவாக்க உதவிய கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனிடம் விளக்கம் அளித்தனர்.
மேலும் கிராமப்புற தொழில்நுட்ப மையங்கள், கண்டுபிடிப்புகள், மின்னணுவியல், கேமிங், மற்றும் அனிமேஷன், சைபர் பாதுகாப்பு, புதுமையான கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.
ஐதராபாத் போல சென்னையில் தகவல் நுட்ப துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த ஆய்வு நடந்ததாக தெரிவித்தனர்.