இந்தியா

காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் டிரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

Published On 2022-06-09 08:21 GMT   |   Update On 2022-06-09 08:21 GMT
  • காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜம்மு:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் சர்வதேச எல்லையில் அதிகாலை 4.15 மணியளவில் டிரோன் பறந்தது.

இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.

டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News