இந்தியா

பாராளுமன்ற இரு அவைகளும் டிச.18 வரை ஒத்திவைப்பு

Published On 2023-12-15 08:55 GMT   |   Update On 2023-12-15 08:55 GMT
  • குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்க முடியாது.
  • எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்திற்கு வெளியேயும், மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்றி கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் வருகிற 18-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News