இந்தியா

12-வது நாளாக எதிர்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2023-08-04 11:15 GMT   |   Update On 2023-08-04 11:15 GMT
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சபை நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.
  • மணிப்பூர் விவகாரம் மேல் சபையிலும் புயலை கிளப்பியது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சபை நடவடிக்கைகள் முடங்கி உள்ளது. இன்று 12-வது நாளாக மணிப்பூர் விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்றம் கூடியதும் எதிர்கட்சி எம்.பிக்கள் இருக்கையை விட்டு எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் எதிர்கட்சியினர் அமளி செய்ததால் பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கபட்டது. பின்னர் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் கூச்சல் குழப்பம் நிலவியதால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வருகிற திங்கட்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் மேல் சபையிலும் புயலை கிளப்பியது. எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மேல்சபையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சிளின் தொடர் அமளியால் இன்று 12-வது நாளாக இரு அவைகளும் முடங்கியது.

Tags:    

Similar News