இந்தியா

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள்: அயோத்தியில் 40 அடி வீணை- பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Published On 2022-09-28 04:27 GMT   |   Update On 2022-09-28 04:58 GMT
  • அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மிகப் பெரிய திறமைசாளிக்கு இது பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். மேலும், அயோத்தியில் உள்ள ஒரு சவுக் பகுதிக்கு லதா மங்கேஷ்கர் பெயர் சூட்டப்படும் என்றும், இது அவருக்குப் பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "

மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். எண்ணற்ற முறை அவரிடம் உரையாடி உள்ளேன். அப்போதெல்லாம் அவர் அன்பு மழை பொழிவார்.

நினைவுகூர்வதற்கு பல விசயங்கள் உள்ளன. அவரது பெயரில் அயோத்தியாவில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் இன்று சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் சிறந்த அடையாள சின்னங்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக அது இருக்கும் என்று அவர் தெரிவித்து உள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் சவுக்கை திறந்து வைக்கிறார்.

Tags:    

Similar News