இந்தியா
null

சந்திரசேகர ராவை எதிர்த்து 113 பேர் போட்டி

Published On 2023-11-15 04:37 GMT   |   Update On 2023-11-15 08:50 GMT
  • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி:

தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவர் முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். மாதம் 4,000 உதவித் தொகை, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை கவர்ந்துள்ளது.

டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, 119 தொகுதிகளுக்கு. மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News