திரிபுரா சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவு
- திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
- தேர்தலில் 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.
முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.