துரோகிகளை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன்- உத்தவ் தாக்கரே பேச்சு
- ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
- டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.
மும்பை:
உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே வெளியிட்ட தகவலில், "முழு உடல் பரிசோதனைக்காக முன்பே திட்டமிட்டதன் படி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் தனது இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் ஒருவர் எவ்வளவு ஓய்வெடுக்க முடியும்? துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை எனக்கு ஓய்வே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா உடைய காரணமாக இருந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று குறிப்பிடுவது வழக்கம்.