சிறைச்சாலைகளில் அதிகளவில் கர்ப்பமாகும் பெண் கைதிகள் - அதிர்ச்சி தகவல்
- 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன.
- சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196 குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கொல்கத்தா ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'இதுகுறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி' கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.