ரூ.20,000 அட்வான்ஸ் கொடுத்து வாங்கிய டிவிஎஸ்.. ரூ.60,000 செலவழித்து கொண்டாடிய நபர்
- முராரி லால் என்பவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார்.
- ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் (TVS XL) பைக் வாங்கியதை ரூ.60,000 பணம் செலவழித்து கொண்டாடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முராரி லால் என்பவர் சிவபுரி மாவட்டத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார். பைக் வாங்கும் முன்பு டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிய படியே பைக் ஷோரூமிற்கு பைக்கை வாங்க சென்றுள்ளார்.
அங்கு பைக்கை முன்பணம் கொடுத்து வாங்கிய பின்பு, ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியுள்ளார்.
தனது குழந்தைகளை மகிழ்ச்சியடையச செய்வதற்காக இவ்வாறு செய்ததாக முராரி லால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முராரி லால் இவ்வாறு செய்வது ஒன்றும் இது முதல் முறையல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மொபைல் போன் வாங்கியதை கொண்டாட ரூ.25,000 செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.