குடிபோதையில் நல்ல பாம்பை கொஞ்சிய வாலிபர்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.
- கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் . இவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லூரி வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று வந்தது. இதனைக் கண்ட நாகராஜ் பாம்பின் அருகில் சென்றார்.
பாம்பு அதன் போக்கில் அருகில் உள்ள புதருக்குள் செல்ல முயன்றது. நாகராஜ் அதனை காலால் தடுத்து நிறுத்தி திசை திருப்பினார். இதனை கண்டதும் நல்ல பாம்பு படம் எடுத்து சீரியது. நாகராஜ் அதனை கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.
அங்கிருந்தவர்கள் பாம்பை தொட வேண்டாம் என நாகராஜை எச்சரிக்கை செய்தனர். ஆனால் விடாப்படியாக பாம்பை அங்கும் இங்கும் அலைக்கழித்தபடி கைகளை தடவி கொடுக்க முயற்சி செய்தார் .அப்போது பாம்பு அவரை கடித்தது. நாகராஜ் வழியால் துடித்தார். பாம்பு புதருக்குள் சென்று விட்டது.
பொதுமக்கள் நாகராஜை உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகராஜ் குடிபோதையில் நல்ல பாம்புடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.