இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி

Published On 2024-07-04 13:37 GMT   |   Update On 2024-07-04 13:37 GMT
  • தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
  • அப்போது பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தார்.

புதுடெல்லி:

சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். துணை முதல் மந்திரியாக விக்ரமர்கா மல்லு பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது துணை முதல் மந்திரியும் உடனிருந்தார். இருவரும் பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தனர்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. தெலுங்கானா மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

ஏற்கனவே இன்று காலை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

Similar News