வீடு வீடாக தண்ணீர் கேட்ட பயங்கரவாதிகள்.. கிராம மக்கள் செய்த செயல்.. வெளியான பகீர் தகவல்
- ஒரு வாரத்துக்குள் அடுத்த தீவிரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
- துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டம் தோடா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான். தப்பிய மற்றோரு பயங்கரவாதியை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி காஸ்மீரின் ரைசி பகுதியில் பக்தர்கள் சென்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்துக்குள் அடுத்த பயங்கரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராணுவம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்துகொண்டனர்.
ராணுவம் பின்னாலயே துரத்தி வரும் நிலையில் விரக்தியிலும் கோபத்திலும் இருந்த அவர்கள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கிராமவாசி ஒருவரையும் சுட்டுள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.