இந்தியா

ஊடுருவலை நிறுத்தும் வரை பயங்கரவாதிகள் செத்துக் கொண்டே இருப்பார்கள்: பரூக் அப்துல்லா

Published On 2024-10-30 13:20 GMT   |   Update On 2024-10-30 13:20 GMT
  • ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரிப்பு.
  • அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்ததன் பேரில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆக்னூர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பரூக் அப்துல்லா பதில் கூறுகையில் "என்கவுண்டர்கள் தொடர்ந்து நடைபெறும். பயங்கரவாதிகள் வந்து கொண்டிருக்கும் வரை, அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவார்கள்

தலைமைச் செயலகம், அரசு அதிகாரிகள் அலுவலகம் ஒரு தலைநகரில் இருந்து மற்றொரு நகருக்குச் செல்லும் தர்பார் நகர்வு நடைபெறும்.

எல்லோரும் தீபாவளி கொண்டாட வேண்டும். இது மிகப்பெரிய திருவிழா. இந்த பகுதியில் செல்வம் குறைவாக இருப்பதால், கடவுளும் லட்சுமி தேவியும் இங்குள்ள மக்களுக்கு செழிப்புடன் அருள்பாலிக்கட்டும். இன்று, பெரும்பாலான கடைகள் இங்கு காலியாக காட்சியளிக்கிறது" என்றார்.

Tags:    

Similar News