இந்தியா (National)

பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர் - கார்கே

Published On 2024-10-08 16:20 GMT   |   Update On 2024-10-08 16:20 GMT
  • காங்கிரஸ், தேசிய மாநாட்டு கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி
  • மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்

ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் 56 இடங்களில் போட்டியிட்டு 42 இடங்களில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெட்டி பெற்றுள்ளதால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதலமைச்சராக பதவி வகித்து இருந்தார்.

இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கூட்டணி அரசின் தலைவரான உமர் அப்துல்லாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News