இந்தியா (National)

பெண் மருத்துவர் கொலை: உரிய நடவடிக்கை இல்லை.. 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா

Published On 2024-10-08 10:17 GMT   |   Update On 2024-10-08 10:17 GMT
  • பயிற்சி மருத்துவர்கள் 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதோடு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Tags:    

Similar News