இந்தியா

அம்பானி குடும்பத்தின் சொத்துமதிப்பு இந்தியாவின் 10% GDP-க்கு சமம் - மலைக்க வைக்கும் அறிக்கை

Published On 2024-08-10 08:08 GMT   |   Update On 2024-08-10 08:08 GMT
  • ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது
  • மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பணக்கார வணிக குடும்பங்களின் சொத்துமதிப்பை பட்டியலிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. புனேவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை இயக்கி வரும் பஜாஜ் குடும்பம், ரூ.7.13 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானி குடும்பத்துக்கு அடுத்த பெரிய வணிக குடும்பமாக உருவெடுத்துள்ளது.

குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ₹5.39 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும் என்ற மலைக்கவைக்கும் உண்மையும் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News