இந்தியா

காட்டில் சங்கிலியில் கட்டுண்டு கிடந்த பெண்மணி - தமிழக ஆதார் கார்டு.. அமெரிக்க பாஸ்போர்ட்.. மர்மம்!

Published On 2024-07-29 08:49 GMT   |   Update On 2024-07-29 10:08 GMT
  • ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
  • வரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு கண்டெடுக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் [Sindhudurg] மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை சோனுருளி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த போலீஸ் நடத்திய சோதனையில் பெண்ணின் உடைமைகளை சோதித்ததில் அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு, மருந்து மாத்திரை பரிந்துரைச் சீட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் இருந்த கொங்கன் பகுதியில் உள்ள சவாந்வேதி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




 


ஆனால் அவரது மனம் மற்றும் உடல் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்ததால் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் இப்போது நலமாக உள்ளதாகவும், மன ரீதியான பிரச்சனைக்கு அவர் ஆளாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டில் அவரது பெயர் லலிதா காயி [Lalita Kayi] என்று உள்ளது. அவரது விசாவும் முடிவடையுள்ளது.

காட்டில் பலநாள் பசியுடன் கடும் மழையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்ததால் அவரிடம் உடல் நிலை கருதி மேலதிக தகவல்களைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அவரது ஆதார் கார்டில் உள்ள முகவரியைத் தேடி போலீஸ் குழு ஒன்று தமிழ்நாடு விரைந்துள்ளது.  

Tags:    

Similar News