இந்தியா

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது

Published On 2024-03-21 13:49 GMT   |   Update On 2024-03-21 13:49 GMT
  • நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் தான் எஸ்.பி.ஐ. தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது
  • தேர்தல் பத்திரங்களின் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கவேண்டும்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

கடந்த பிப்ரவரி மாதம் 15 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை எஸ்.பி.ஐ. இரண்டு பகுதிகளாக வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் அளித்த எஸ்.பி.ஐ. முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

இதனையடுத்து கடந்த 18-ம் தேதி அன்று தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு அதுகுறித்து பிரமாணப்பத்திரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. 

Tags:    

Similar News