பழைய பிரின்சிபலை தடாலடியாக இழுத்துத் தள்ளி நாற்காலியில் அமர்ந்த புது பிரின்சிபல் - வீடியோ
- பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
- தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் பிஷப் ஜான் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பருல் பால்தேவ் என்ற பெண்மணி தலைமை ஆசிரியையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
ஆனால் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார். இதனால் பள்ளி தாளாளர் உட்பட பிற பணியாளர்கள் ஒன்றாக திரண்டு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே நாற்காலியில் அமர்ந்திருந்த பருலை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் நாற்காலியில் இருந்து நகராமல் இருந்த பருலை பிடித்து இழுத்து அகற்றி அந்த நாற்காலியில் புதிய தலைமை ஆசிரியரையை அமர வைத்துள்ளனர். தன்னிடம் கடுமையாக நடந்த கொண்டவர்கள் மீது பருல் போலீசில் புகார் அளித்துள்ளார். பள்ளியின் தலைமையாசிரியையிடம் நிர்வாகம் தகாத நடந்துகொண்ட இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவு கண்டங்களை குவித்து வருகிறது.