இந்தியா

ஸ்கூல் ஃபீஸ் கட்டாத மாணவிகளை வெயிலில் அமர வைத்த பிரின்சிபல்.. வீடியோ எடுத்து பெற்றோர்களுக்கு மிரட்டல்

Published On 2024-10-02 01:58 GMT   |   Update On 2024-10-02 01:58 GMT
  • 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி முகத்தை மூடி அமர்ந்துள்ளனர்
  • பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உ.பியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொளுத்தும் வெயிலில் அமர வைத்து பிரின்சிபல் வீடியோ எடுத்துள்ளார். ஃபீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாரத்நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி தனியார் பள்ளியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி தங்களது முகத்தை மூடி அமர்ந்திருக்கும்போது பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும் ஆனால் இனிமேலும் கட்டவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு அந்த பிரின்சிபல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News