பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற 30 ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கு ரத்து - உச்சநீதிமன்றம்
- இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார்
- 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது
டிசம்பர் 4, 2021 - நாஜிலாந்தில் மோன் [mon] மாவட்டத்தில் உள்ள ஓடிங் [Oting] கிராமத்தில் சுரங்க பணியாளர்களை ஏற்றிச் சேர டிரக் வாகனத்தின் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஊடுருவல்காரர்கள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கியதாக ராணுவ வீரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ராணுவ வீரர்களின் முகாம்கள் முன்னர் திரண்டு 250 க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தது. இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார். மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்துத் தாக்குதலில் தொடர்புடைய 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 30 ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அவர்கள் மீது ராணுவத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கு நீக்கம் நாட்டில் பொதுமக்களின் உயிர்கள் மீதான மதிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.