இந்தியா

'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது'.. ஹத்ராஸ் பலிகளுக்கு போலே பாபா இரங்கல் வீடியோ

Published On 2024-07-06 04:14 GMT   |   Update On 2024-07-06 04:14 GMT
  • சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
  • போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின்  குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News